தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம்தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு எண்ணும்அறைகளில் கம்பி தடுப்புகள் அமைத்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் பாதை போன்ற வசதிகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர்கி.செந்தில் ராஜ் மற்றும் 6 தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைவாக முடிக்க உரியஅறிவுரைகளை அவர்கள் வழங்கினர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதியிலும் கரோனா விதிமுறைகளை எவ்வாறுகடைபிடிப்பது என்பது குறித்தும், சட்டப்பேரவை தொகுதி வாரியாகமின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை வைக்ககூடிய ஸ்ட்ராங் ரூமில் என்னென்ன பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரேண்டம் முறையில் தொகுதியில் பணியாற்றநடைபெற்றது. வரும் 26.3.2021 அன்று இரண்டாம் கட்டப் பயிற்சி நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம்120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கோவில்பட்டி, தூத்துக்குடியில் தலா 26 பேரும், குறைந்தபட்சமாக திருச்செந்தூர், விளாத்திகுளத்தில் தலா 15 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், மற்ற 4 தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் இதுவரை ரூ.1.20 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைசாமிராஜ், உதவி செயற்பொறியாளர் (மின் பணிகள்) ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.