உத்தராகண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத்அண்மையில் பதவியேற்றார்.
இந்நிலையில், சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு,கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் பரிசோத னையில் எனக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என அவர் கூறியுள்ளார்.