திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த நியூ திருப்பூர் அருகே நேற்று அதிகாலை விஜயகுமார் (41) என்பவர் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். பெருமாநல்லூர் சாலை அய்யம்பாளையம் அருகே மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளிகளான போயம்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி (24), அவரது நண்பர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா ராம் (24) ஆகியோரின் இருசக்கர வாகனமும் சிக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே சந்திரிகா ராம் உயிரிழந்தார். படுகாயமடைந்த பாண்டி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.