Regional02

கத்தியை காட்டி தொழிலாளியிடம் - வாகனம் பறிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

அவிநாசி அருகே கட்டிடத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கருமலைபாடியைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (21). கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த 19-ம் தேதி இரவு அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருப்பூர் ஜெய் நகரை சேர்ந்த கார்த்திக் (23), திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (23) ஆகியோரை கடந்த 20-ம் தேதி கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த வீரமுருகன் மகன் பாலாஜி சரவணன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT