Regional02

தபால் நிலையத்தில் ஆதார் சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

சேலம் தலைமை தபால் நிலையத் தில் ஆதார் சேவை சிறப்பு முகாம் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம் வரும் 31-ம் தேதிவரை நடக்கிறது. முகாமில், விரைவான சேவையை பொது மக்களுக்கு வழங்கும் வகையில்மூன்று கவுன்ட்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல், பாலினம் மாற்றம் செய்ய ரூ.50-ம் இந்த திருத்தங்களுடன் பயோ மெட்ரிக் பதிவுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

பெயர், முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கார்டு, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஆயுள் காப்பீடு சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் கொண்டு வர வேண்டும். அலைபேசி எண்மற்றும் மின்னஞ்சல் மாற்றம் செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT