சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் சார்ந்த ஒரு நாள் ஆராய்ச்சி பயிற்சி கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு, பல்கலைக் கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை வகித்து பேசும்போது, “சமூக அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை முதன்மையான முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட வேண்டும்” என்றார்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், சென்னை ஜஜடி-யின் மேலாண்மைத் துறை பேராசிரியருமான முனைவர் கணேஷ் முன்னிலை வகித்து பேசும்போது, “அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி அணுகுமுறையே சமூக வளர்ச்சிக்கும், வணிகவியல் துறை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
கருத்தரங்கில், புலமுதன்மையர் பேராசிரியர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.