Regional01

கடலூர்மாவட்டத்தில் - மதுபானம் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

செய்திப்பிரிவு

மதுபானம் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேர்தல் விதிகளுக்கு முரணாகமது பானங்களை கடத்துதல், பதுக்குதல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல்பிரிவு, காவல்துறை அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் சத்தியன் (9095132388 ) தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் பண்ருட்டி மகேஷ் (9498154903) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே தேர்தல் விதிகளை மீறி சட்டவிரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்டுள்ள சிறப்புக்குழு அலுவலர்களின் கைப்பேசி எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT