புதுச்சேரியில் சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சுசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் லெனின்துரையும், கதிர்காமம் தொகுதியில் சரவணனும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இருவரும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலை யில் இருவரும் திடீரென்று நேற்று வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.
என்ன காரணம்?
எங்கள் கட்சி உரிய ஆவணங் களை உரிய நேரத்தில் தரவில்லை. அதனால் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எங்களுடைய கட்சியானது வேறு கட்சியின் பெயரில் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்காது. அதனால் வேட்பு மனுக்களை திரும்ப பெற்று விட்டோம்” என்று குறிப்பிட்டனர்.