Regional01

மது பாட்டில்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் சமயத்தில் அனும தியின்றி மது பாட்டில்கள் விற்பதை தடுக்கவும், வாக்காளர்களுக்கு மது பாட்டில்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும் டாஸ்மாக் அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் காளையார்கோவில், இளை யான்குடி அருகே விளாங்குளம், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதி களில் சோதனையிட்டனர்.

அப்போது பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப் பிலான மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை வைத்திருந்த ஆரோக்கியசாமி, குமார், பூமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT