அருப்புக்கோட்டை உஜ்ஜயினி கோயில் தெருவில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன். 
Regional03

அருப்புக்கோட்டையில் - வைகைச்செல்வன் வாக்கு சேகரிப்பு :

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச் சர் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், கடந்த முறை தான் அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். அருப்புக்கோட்டை உஜ்ஜயினி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் நேற்று வாக்குச் சேகரித்தார்.

பின்னர் செய்தியா ளர்களிடம் வைகைச் செல் வன் கூறுகையில், நான் அமைச்சராக இருந்தபோது அருப்புக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஐடிஐ பயிற்சிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்தேன். சாலை வசதிகளை செய்து தந்தேன். இதை எடுத்துக் கூறி, மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

இம்முறை என்னைத் தேர்ந்தெடுத்தால் அருப்புக் கோட்டையில் வாகன நிறுத் துமிடங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கைத்தறிக்கான வார ஜவுளிச் சந்தை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT