மதுரை பழைய விளாங்குடி வருமானவரித்துறை காலனியைச் சேர்ந்த முரளி மனைவி உமா மகேசுவரி. இவர் 2019-ல் அதே பகுதியைச் சேர்ந்த னிவாசனிடம் அவசரத் தேவைக்காக ரூ.4 லட்சம் கடன் வாங்கினார்.
இதற்காக ரூ.13 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் கூடுதல் வட்டிகேட்டு னிவாசன் தொடந்து தொந்தரவு செய்து வந்தார்.
இதுகுறித்து உமா மகேசுவரி மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், னிவாசன், அவரது தரப்பைச் சேர்ந்த நிர்மலா, கிரீஷ், பிரபாகரன், கனி ஆகியோர் மீது கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.