சேலம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், தனியார் நிறுவன கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சேலம் அம்மாப்பேட்டை அடுத்த உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று அதிகாலைசீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேம்பாலத்தில் பழுதாகி நி்ன்ற லாரி மீது அவர் சென்ற மோட்டார் சைக்கிள்மோதியது. இதில், நிகழ் விடத்திலேயே வெங்கடேஷன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அன்ன தானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.