Regional03

சேலம் மாவட்டத்தில் 207 பேர் போட்டி : நாமக்கல் மாவட்டத்தில் 140 வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் மொத்தம் 347 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட 412 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 186 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 226 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 19 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதையடுத்து, மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி உட்பட மொத்தம் 207 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 11 வேட்பாளர்களும், ஆத்தூர் (தனி) 11, ஏற்காடு (தனி) 13, ஓமலூர்- 15, மேட்டூர் 14, எடப்பாடி-28, சங்ககிரி 23, சேலம் மேற்கு 28, சேலம் வடக்கு 20, சேலம் தெற்கு 24, வீரபாண்டி 20 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் தலா 28 பேர் பேட்டியிடுகின்றனர்,

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட 214 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 149 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.9 வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள், நாமக்கல் தொகுதியில் 26 வேட்பாளர்கள், பரமத்தி வேலூர் தொகுதியில் 27 வேட்பார்களும், திருச்செங்கோடு தொகுதியில் 28 வேட்பாளர்களும், குமாரபாளையம் தொகுதியில் 29 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதன்படி மாவட்டம் முழுவதும் 140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT