Regional03

100 சதவீதம் வாக்களிப்பு வலியுறுத்தி தீவிர விழிப்புணர்வு : நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்

பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி யில் மொத்தம் 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 2,049வாக்குச் சாவடிகள் உள்ளன.வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 9,836 அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலி யுறுத்தி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதியிலும் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பொதுப் பார்வையாளர்கள் சசிதர் மண்டல், பி.ஏ.ஷோபா, நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா, ஏ.பி. கார், காவல் பார்வை யாளர் என்.சைத்ரா கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT