Regional03

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது: கே.வி.தங்கபாலு :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மத்திய பாஜக அரசு மீதும், அதிமுக அரசு மீதும் தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு எதிரான அலை வீசுகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கரோனாவை காரணம் காட்டி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்றார்.

SCROLL FOR NEXT