Regional01

சங்கரன்கோவிலில் 35 மி.மீ. மழை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாவட்டத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 35 மி.மீ. மழை பதிவானது. சுரண்டை, சாம்பவர்வடகரை பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

SCROLL FOR NEXT