Regional01

திருவள்ளுவர் பேரவை கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் திருவள்ளுவர் பேரவையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கேப்டன் ஆறுமுகம் தலைமை வகித்தார். காவலர் தளவாய் மாடசாமி முன்னிலை வகித்தார். தமிழ் இயக்கங்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் பாப்பாக்குடி இரா.செல்வமணி வரவேற்றார். 'வள்ளுவம் காட்டும் நெறிமுறைகள்' எனும் தலைப்பில் முருக இளங்கோ சிறப்புரையாற்றினார். பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் கோதை மாறன், அருணாசலம், சிவ.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இரண்டு நிமிடங்களில் அதிக குறள்களை ஒப்புவித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT