Regional01

செவிலியரிடம் அநாகரீகம் வடமாநில இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மதிய வேளையில் செவிலியர் ஒருவர்மட்டும் பணியில் இருந்துள்ளார்.

அப்போது, மருந்து வாங்க 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்றுள்ளார். அவரிடம், முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வரவேண்டும் என செவிலியர் கூறியுள்ளார். அந்த நபர் செவிலியரிடம் அநாகரீகமாக நடக்க முயற்சி செய்துள்ளார். செவிலியரின் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.

புதுக்கடை போலீஸார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அவரது அடையாளத்தை வைத்து மேல்மிடாலம் கடற்கரையில் சுற்றித்திரிந்த அந்த நபரை போலீஸார் பிடித்தனர். அவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லிலு (50) என்பது தெரியவந்தது. அவரை, போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT