Regional02

கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கயத்தாறு நாகம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அன்னராஜ் மகன் கனகராஜ் (29), கயத்தாறு தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலை (52). இவர்கள் இருவரும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செட்டிகுறிச்சி வெள்ளாளன் கோட்டை சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 24.02.2021-ல் கயத்தாறு போலீஸார் கைது செய்தனர்.

இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT