சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது. 
Regional02

மாணவர்கள் தொழில்முனைவோர் ஆவது எவ்வாறு? :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் சார்பில்“கல்வி நிறுவனங்கள் - தொழில் துறை இடையேயான தொடர்புகள்” என்ற பயிலரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி செல்வநாராயணன் விழாவினை தொடங்கி வைத்தார். அறிவியல் புல முதல்வர் முனைவர் நிர்மலா பி. ரட்சகர் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் இயக்குநகரத்தின் இயக்குநர் மற்றும் இப்பயிலரங் கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

சேலம் தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் கலந்து கொண்டு பேசுகையில், இளங்கலை பொறியியல் படிக்கும்போது கற்ற அனுபவங்கள் பிற்காலத்தில் தொழில் தொடங்க பெரிதும் உதவியதாக குறிப் பிட்டார். மாணவர்கள் ஆர்வம், கடினஉழைப்பு ஆகியவை கொண்டு சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார். நிறைவு விழாவிற்கு பல்கலைக்கழக பொறியியல் புலமுதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார். பயிலரங்க அறிக்கையினை கல்வியியல் புல வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி குலசேகர பெருமாள் பிள்ளை வாசித்தார். பயிலரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார். பல்கலைக்கழகத்தின் துறை ஒருங்கிணைப்பாளர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி கள், பேராசிரியர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் ஆர்வம், கடின உழைப்பு ஆகியவை கொண்டு சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும்

SCROLL FOR NEXT