Regional02

கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள் கூட்டத்தில் - பணம் விநியோகித்ததாக 11 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றோருக்கு பணம் விநியோகித்ததாக 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தேர்தல் பிரச்சாரப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்றோருக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோ சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.மதுசூதன் ரெட்டிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணதாசன் புகாரின் பேரில் பணம் விநியோகம் செய்ததாக 11 பேர் மீது சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT