Regional02

அடவிநயினார் அணை அருகில் - மா, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் வடகரை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து மா, தென்னை மரங்களையும், நெல் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. பம்பு செட் குழாய்கள், வேலிகள் போன்றவற்றையும் உடைத்து சேதப்படுத்துகின்றன. கடந்த ஓராண்டு காலமாக யானைகள் தொந்தரவு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு தீர்வு காண அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேக்கரை அணை அருகே விவசாய நிலங்களில் யானைகள் மீண்டும் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “மேக்கரை அருகே சீவலாங்காடு, வடகாடு பகுதிகளில் தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. மேலும், மேக்கரையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் 17 இலவம் பஞ்சு மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டன. இரவில் கூட்டமாக வரும் யானைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பகலில் எங்காவது பதுங்கிக்கொள்ளும் யானைகள், இரவில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. யானை களை காட்டுக்குள் விரட்ட போதுமான ஆட்கள் இல்லை என்று வனத்துறையினர் கூறுகின்றனர். யானைகளால் தொடர் பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்ற னர். இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை வனத்துறை யும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT