கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை, காக்காவிளை சோதனைச் சாவடிகளில் போலீஸார், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 600-க்கும் மேற்பட்டோருக்கு சளி, ரத்தம் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு பின்னர் கரோனா வால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித் துள்ளது. முகக்கவசம் அணியாத வர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு உள்ளாட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். தொற்று அதிகரிப் பதால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தி லும் கரோனா பாதிப்பு அதிகரித்துள் ளது. நேற்று 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,889 ஆக உள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 15,590 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 84 பேர் சிகிச்சையில் உள்ளனர்.