Regional01

விதிகளை மீறி கட்சி கொடிகளை கட்டிய அதிமுகவினர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் பகுதியில் அரவக் குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். இதற்காக மலைவீதி ரவுண்டானாவில் இருந்து காந்தி நகர் சாலை வரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து அரவக்குறிச்சி பறக்கும் படை 1 அலுவலர் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி கொடிகள் கட்டியதாக அதிமுகவினர் மீது வேலாயுதம்பாளையம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT