Regional03

மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளருக்கு மாரடைப்பு :

செய்திப்பிரிவு

மன்னார்குடி தொகுதி அம முக வேட்பாளர் எஸ்.காம ராஜூக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது, இதையடுத்து, அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன் னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா ளரான எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து, அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், காமராஜூக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக ஆஞ்சியோ மூலம் இரு இடங்களில் ஸ்டென்ட் வைக்கப் பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT