TNadu

கந்தர்வக்கோட்டையில் : ரூ.5.91 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தச்சன்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட் டனர். அப்போது ஒரு வேனை சோதனையிட்டதில், ரூ.5 கோடியே 91 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன.

ஒரு பிரபல நகை நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த நகைகளை, சேலத்தில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி போன்றபகுதிகளில் உள்ள தங்களின் கிளை நிறுவனங்களுக்குகொண்டு செல்வதாக, வேனில் இருந்தவர்கள் கூறினர்.

ஆனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கந்தர்வக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து நகை விநியோகிப்பு முகவர் சேலம் - சின்ன வீராணம் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வாகன ஓட்டுநர் மேச்சேரி சந்தோஷ்குமார் ஆகியோரிடம் தேர்தல் அலுவலர்கள் மற்றும்போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT