Regional01

கள் விடுதலைக்கு ஆதரவு அளித்தால் - எடப்பாடி, கொளத்தூரில் வேட்பாளர் வாபஸ் : ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தகவல்

செய்திப்பிரிவு

கள் விடுதலையை ஏற்கும் கட்சிக்கு ஆதரவாக, கள் இயக்க வேட்பாளர் போட்டியிலிருந்து விலகி கொள்வார் என தமிழக கள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிகளில், கள் இயக்கத்தின் சார்பில் இல. கதிரேசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் கள் விடுதலையை அறிவித்தால், முதலில் அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவாக கள் இயக்கம் போட்டியிலிருந்து வேட்பாளரை விலக்கிக் கொள்ளும், எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT