Regional01

கரோனா பரவலைத் தடுக்க - வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் பி.முருகேசன் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில், கோயில்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.முருகேசன் பேசியதாவது:

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் நுழைவு வாயிலில், கிருமிநாசினி கட்டாயம் வழங்கி கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்பு நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். பஜனை குழு, பக்தி குழு ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது. அடிக்கடி, சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT