Regional03

ஊத்தங்கரை அருகே சீரமைக்கப்படும் சாலை :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை வரை குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணிகள் நேற்று தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், சீரமைக்கும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டை முதல் கிருஷ்ணகிரி வரை இச்சாலை, பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளித்து வந்தது. சாலையை சீரமைக்கக்கோரி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் ஊத்தங்கரை பகுதியில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. சிங்காரப்பேட்டை முதல் ஊத்தங்கரை வரை சாலையில் உள்ள குழிகளை அடைத்து சீரமைக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT