Regional01

மேல்மலையனூர் அருகே - பறக்கும் படையினரால் ரூ.1.68 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

மேல்மலையனூர் அருகே கடப்பனந்தல் கிராமத்தில் நேற்று காலை பறக்கும்படை அலுவலர் ஜானகிராமன் தலைமையிலான குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்தவழியாக பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த ஜெயசீலனை சோதனை செய்தனர்.

அவர் உரிய ஆவணமின்றி ரூ. 1,68,610 வைத்திருந்தது தெரியவந்தது. இத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் செஞ்சி வட்டாட்சியர் ராஜனிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT