Special

திருப்பத்தூர் தொகுதியில் 8 மனுக்கள் நிராகரிப்புஅதிமுக, திமுக உள்ளிட்ட 27 பேரின் மனுக்கள் ஏற்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மருது அழகுராஜ், திமுக சார்பில் கே.ஆர்.பெரியகருப்பன், அமமுக சார்பில் கே.கே.உமாதேவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோட்டைக்குமார், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அமலன் சபரிமுத்து உட்பட 35 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.

இதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT