Regional01

தேர்தல் கண்காணிப்புக்கு 72 குழுக்கள் :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 72 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க 72 பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கண்காணிப்பது டன் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எனவே, மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT