Regional02

அமமுக வேட்பாளர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு :

செய்திப்பிரிவு

திருப்பூரில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அமமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் விதிமுறையைபின்பற்றாமல், திருப்பூர் தெற்கு தொகுதி அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்துக்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் மற்றும் அவரது தொண்டர்கள், நேற்று முன்தினம்நுழைய முயன்றனர். விதிகளை மீறியதால், அவர்களை போலீஸார் தடுத்தனர்.

இதனால் இருதரப்பினருக்கிடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், வேட்பாளர் விசாலாட்சி மற்றும் கட்சியினர் உட்பட 5 பேர் மீது திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT