Regional03

கோவை, நீலகிரி மாவட்டங்களில் : 368 வேட்பாளர்கள் மனு தாக்கல் :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 317 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையத்தில் 36 பேர், சூலூரில் 25, கவுண்டம்பாளையத்தில் 27, கோவை வடக்கில் 35, தொண்டாமுத்தூரில் 39, கோவை தெற்கில் 33, சிங்காநல்லூரில் 38, கிணத்துக்கடவில் 33, பொள்ளாச்சியில் 36, வால்பாறையில் 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்,’’ என்றனர்.

பொள்ளாச்சி தொகுதியில் அமமுக, நாம் தமிழர் கட்சியினரின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேர் பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா.வைத்திநாதனிடம் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம்

SCROLL FOR NEXT