Regional02

சேலம் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் ரூ.50 ஆக அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

சேலம், ஈரோடு உள்பட 4 ரயில் நிலையங்களில் இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணிகள் தவிர மற்றவர்கள் உள்ளே வருவதைத் தடுக்க பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (20-ம் தேதி) முதல் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ஏற்கெனவே ரூ.10 ஆக இருந்தது. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிளாட்பார்ம் களில் கூட்டம் சேருவதைத் தடுக்கும் வகையில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 4 ரயில் நிலையங்களிலும் இன்று முதல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT