கிருஷ்ணகிரியில் உயர்த்தப்பட்ட கட்டிட வரியை வசூலிக்க, தனியார் பள்ளியின் முன்பு குப்பை வண்டிகளை நிறுத்தி, காத்திருந்த தூய்மைப் பணியாளர்கள். 
Regional03

கிருஷ்ணகிரியில் உயர்த்தப்பட்ட கட்டிட வரியை வசூலிக்க - தனியார் பள்ளி முன்பு குப்பை வண்டிகளுடன் காத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் உயர்த்தப்பட்ட கட்டிட வரியை வசூலிக்க, குப்பை வண்டிகளுடன் தூய்மைப் பணியாளர்கள் காத்திருந்தனர்.

கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மோட்டூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அகசிப்பள்ளி ஊராட்சி நிர்வாகம், இப்பள்ளிக்கு உயர்த்தப்பட்ட கட்டிட வரி, நூலக வரி செலுத்தக் கோரி, பள்ளியின் முன்பு தூய்மைப் பணியாளர்களை குப்பை வண்டிகளுடன் நிறுத்தினர். இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியுற்றனர்.

இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் கொங்கரசன் கூறும்போது, ‘‘கடந்த 2019-20-ம் ஆண்டு வரை பள்ளிக்கு கட்டிடம் மற்றும் நூலக வரியாக ஊராட்சி மூலம் ரூ.27,500 நிர்ணயம் செய்து வசூலித்தனர். தற்போது 5 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அளித்தனர்.

ஏற்கெனவே கரோனா ஊரடங் கால் பள்ளி செயல்பட வில்லை. இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தினாலும் பெரும்பாலான மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை. பல்வேறு சிரமங்களை எடுத்துக்கூறி கட்டிட வரியை குறைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளோம். இதனைக் கண்டுகொள்ளாமல், வரி கட்டவில்லை எனக் கூறி கடந்த 2 நாட்களாக ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை பள்ளியின் நுழைவு வாயிலில் அமர வைத்தும், பள்ளிக்குள்யாரும் செல்ல முடியாதவாறுகுப்பை வண்டிகளை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம்,’’என்றார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, ‘‘பள்ளியின் முன்பு நின்றி ருந்த தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித் துள்ளோம். பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உரிய கட்டிட வரி விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றார்.

SCROLL FOR NEXT