Regional03

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபான பாட்டில்கள் கொடுக்க மறுத்த விற்பனையாளரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். மதுக் கடைகளில் விற்பனைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். வேலை நேரத்தை காலை 10 முதல் மாலை 6 மணி வரை என முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT