Regional02

தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண் வெளியீடு : புகார்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில், தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நீலகிரி மாவட்டத்துக்கு இரு செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி உதகை தொகுதிக்கு விஷால் எம் சனாப் (செல்போன் எண் 9498748320) கூடலூர் (தனி), குன்னூர் தொகுதிகளுக்கு அமர்சிங் நெஹ்ரா (செல்போன் எண் 9498748321) ஆகியோர் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250034 மற்றும் மாவட்ட தகவல் மைய எண் 1950 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் செல்போன் எண்ணுக்கும் புகார்களைதெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT