சேலத்தில் 54 முறை போக்குவரத்து விதிமீறிய ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலத்தில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் அலைபேசிக்கு தகவல் அளித்து அபராதத் தொகை குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் 54 முறை போக்குவரத்து விதிமீறியுள்ளார்.
இதற்கான அபராதத் தொகையை கட்டாமல் இருந்து வந்தார். நேற்றும் விதிமீறி சரக்கு ஆட்டோ ஓட்டியதை கண்காணித்த போலீஸார் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை ரூ.7 ஆயிரத்தை வசூலித்தனர். அதன்பின்னர், அவரை எச்சரித்து பறிமுதல் செய்த சரக்கு ஆட்டோவை விடுவித்தனர்.