Regional03

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவந்த - ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

பவானி அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மின்ன வேட்டுவபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட் டனர். அப்போது கோபியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.இதில், பிரவீன் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 250 கிராம் எடைகொண்ட தங்க கட்டி, 48 தங்க காசுகள், 660 கிராம் எடை கொண்ட 20 தங்கச் செயின், 8 தங்கக் கொடி, 24 கிராம் எடை கொண்ட இரண்டு வளையல், 16 கிராம் முகப்பு தங்கத் தகடு உள்ளிட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகளைப் பறிமுதல் செய்தனர். இவை மாவட்ட கருவூலத்தில் ஒப் படைக்கப்பட்டன.

ஓசூர்

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஷகின்ஷா என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 900-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் குண சேகர் மூலமாக ஓசூர் சார்நிலை கருவூலத்தில், பறிமுதலான பணம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT