கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,295 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்ரல் 6-ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தலா ஒரு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 2-ம் நாளன்று 24 வேட்பாளர்கள் 24 மனுத் தாக்கல் செய்தனர். கடந்த 16-ம் தேதி செவ்வாய்கிழமை 2 பேர் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 34 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் . நேற்று 40 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 102 மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்