Regional02

கல்லூரி மாணவர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தினமும் கல்லூரி மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை புளித்துப்போன இட்லி வழங்கியதாகக் கூறி, அதைக் கண்டித்து மானாமதுரை சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT