Regional03

தபால் வாக்குச்சீட்டு வழங்குவதில் குளறுபடி - தேர்தல் பணியில் ஈடுபடுவோர் குற்றச்சாட்டு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்குவதில் குளறுபடி உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயருக்கான பாகம் எண் மற்றும் தேர்தல் பணிக்காக வழங்கப்படும் அரசு ஆணையில் வரக்கூடிய வாக்காளர் பட்டியலுக்கான பாகம் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பணிக்காக வழங்கப்படும் ஆணையில் பாகம் எண் மாறி வருவதால் இவர்கள் அளிக்கக்கூடிய தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையில் பாகம் எண் குறிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பணியி்ல ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் அதிகாரியிடம் தகவல் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT