புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை தொகுதியில் 3 பேர், விராலிமலையில் ஓ.கார்த்தி பிரபாகரன்(அமமுக) உட்பட 9 பேர், புதுக்கோட்டையில் எம்.சுப்பிரமணியன் (தேமுதிக) உட்பட 8 பேர், திருமயத்தில் 5 பேர், ஆலங்குடியில் 3 பேர் மற்றும் அறந்தாங்கியில் சிவசண்முகம்(அமமுக) உட்பட 7 பேர் என மொத்தம் 35 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட அண்ணா திராவிடர் கழக வேட்பாளர் நடராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், ஒரு சுயேச்சை வேட்பாளர் என 3 வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.சாதிக்பாஷா, தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.