Regional02

இனாம்கரூர் அடிமனை பிரச்சினைக்கு தீர்வு: செந்தில்பாலாஜி :

செய்திப்பிரிவு

கரூர் நகராட்சி 2-வது வார்டு பெரியகுளத்துப்பாளையத்தில் திமுக வேட்பாளர் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: நான் வெற்றிப்பெற்றதும் இனாம்கரூர் அடிமனை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இனாம்கரூ ரின் அனைத்து பகுதிகளிலும் சிமென்ட், தார்சாலை அமைத்து தரப்படும். குப்பை வரி குறைக்கப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சிறப்பு திட்டத்தின் மூலம் கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் இப்பகு திக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும். கர்ப்பிணி களுக்கான உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும். என் வாழ்நாளை கரூர் தொகுதிக்கு அர்ப்பணித்துவிட்டேன் என்றார். தொடர்ந்து, அங்குள்ள கன்னிமார் கோயிலில் வழிபாடு செய்தார்.

SCROLL FOR NEXT