Regional01

சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

புளியரையில் பறக்கும்படை குழுவினர் சோதனை நடத்தினர். கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றவரிடம் இருந்து ரூ.2,21,500, கேரளாவில் இருந்து வாடிப்பட்டிக்கு சென்றவரிடம் இருந்து ரூ.1,27,500 தொகையை பறிமுதல் செய்தனர். இதேபோல், சிவகிரி அருகே ராயகிரி சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, ராஜபாளையத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து ரூ.53 ஆயிரத்தை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.02 லட்சம் தொகை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT