நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
Regional01

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி யிடும் ரூபி மனோகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினர் ஞானதிரவி யம், முன்னாள் மத்திய இணைய மைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

சொத்து மதிப்பு:

அசையும் சொத்து அவரது பெயரில் ரூ.38 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ.23.81 கோடி. அசையா சொத்து அவரது பெயரில் ரூ.16 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடி. கடன் அவரது பெயரில் ரூ.6 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ.6 கோடி.

நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ஜெகதீசன், பிரபாகரன், கந்தன் ஆகியோரும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக மாற்று வேட்பாளர் எஸ்.இசக்கிதுரை மனு தாக்கல் செய்தார். பாளையங்கோட்டை தொகுதியில் திமுக மாற்று வேட்பாளராக ஏ.கஜரா மற்றும் சுயேச்சை வேட்பாளர்களாக எஸ்.ராஜா, ஆர்.தயாளன், எஸ்.வீரசுப்பிரமணியன் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.

திருநெல்வேலி தொகுதியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளராக எம். சுந்தர்ராஜ், சுயேச்சை வேட்பாளராக வி. பரமசிவன் ஆகியோரும், ராதாபுரம் தொகுதியில் திமுக மாற்று வேட்பாளராக ஏ.அலெக்ஸ் ராஜா, சுயேச்சை வேட்பாளர்களாக டி. வீனஸ் வீரஅரசு, ஐ. இசக்கியப்ப மாணிக்க ராஜா ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT