Regional03

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு உடல் திடகாத்திரம் மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்குஉட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் சமர்பிக்கலாம்.

மேலும், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை கேன்டீன் ஆகிய இடங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இப்பணிக்கு அரசு விதி முறைகளின் படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT