திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவை செயலாக்க மேலாண்மை இயக்குநர் அலுவலகம் மூலம் சிறப்பு குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மலை மாவட்ட எல்லைக்குள் முறையற்ற மதுபானவிற்பனை, மதுபானம் கடத்தல், மொத்தமாக விற்பனை செய்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மதுபான கடைகள் திறந்து இருப்பது உட்பட மதுபானம் விற்பனை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இது தொடர்பாக, தி.மலை கோட்ட கலால் அலுவலர் சுகுணாவை 79046 12207 மற்றும் சீனிவாசனை 94981 50422 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.