ஈரோடு சக்திமசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் சக்தி மருத்துவமனையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், அறக்கட்டளை அறங்காவலர்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். 
Regional02

சக்தி மசாலா நிறுவனத்தின் - சக்தி மருத்துவமனையில்சிறப்புப்பிரிவுகள் தொடக்கம் :

செய்திப்பிரிவு

சக்தி மசாலா நிறுவனத்தின் அங்கமான சக்தி மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை மற்றும் மூளை நரம்பியல் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் சக்தி மருத்துவமனை கடந்த 18 ஆண்டுகளாக, பொது மருத்துவம், எலும்புமுறிவு, தோல், கண், பல் மருத்துவம், குழந்தைகள், மகளிர் மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் மற்றும் மனநல மருத்துவம் என பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. இம்மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி முதல் காது, மூக்கு, தொண்டை சிறப்புப்பிரிவும், 13-ம் தேதி முதல் மூளை நரம்பியல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய சிகிச்சைப் பிரிவுகள் தொடக்கவிழாவிற்கு சக்திதேவிஅறக்கட்டளையின் அறங்காவலர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரை சாமி முன்னிலை வகித்தனர். சக்தி மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.ஏ.செந்தில்வேலு, சுஜாதா செந்தில்வேலு, பாமாசேகர், ராஜலட்சுமி, சி.சதானந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன்படி, ஒவ்வொரு வாரம் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் எம்.ஒய். சிராஜுன்னிஸாவும், ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மருத்துவர் வி.காஞ்சனா, மூளை நரம்பியல் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் குழந்தைகள், பெற்றோர், புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT